திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் அரசு மருத்துவமனை

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் அரசு மருத்துவமனை
X

Tirupur News- தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழுவினர், அரசு மருத்துவமனையில்  ஆய்வு நடத்தினர். 

Tirupur News- திருப்பூரை அடுத்துள்ள 15 வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வந்த அரசு மருத்துவமனை விரைவில் திறக்கப்பட உள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர், 15 வேலம்பாளையத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், 90 சதவீதப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையிலான தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழுவினர் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அவிநாசி, சேவூர் பகுதியில் ஆய்வு நடத்திய குழுவினர், 15 வேலம்பாளையத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைக்கா குழு) நிதி, 27 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.

கடந்த 2022ல் பிப்ரவரி மாதம் பணி துவங்கிய நிலையில், இரண்டு ஆண்டு நிறைவு பெற உள்ளதால், பணி முடிவடைந்து விட்டதா, தேர்தலுக்கு முன் பணிகள் முழுமையாக முடிந்து, திறப்பு விழாவுக்கு தயாராகி விடுமா என்பது குறித்து பொதுப்பணித்துறை, மருத்துவக்குழுவினரிடம் கேள்வி எழுப்பினர்.

அதிகாரிகள்,' 90 சதவீத பணி முடிந்து, மின் இணைப்பு, எந்தெந்த தளங்களில், எந்த அறை, வார்டு பிரிப்பு ஆகிய பணி நடந்து வருகிறது,' என, பதிலளித்தனர்.

மருத்துவமனை தரைத்தளம், லிப்ட், முகப்பு பகுதி, வார்டு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, தரைத்தளம் உள்ளிட்ட இடங்களை, ஐந்து நிமிடம் பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்து புறப்பட்டனர்.

மருத்துவமனை அமைவிடம், வார்டு, அறை குறித்து மூன்று தளங்களின் அமைப்பு குறித்து 'புராஜெக்ட்' வரைபடம் தயாரிக்கப்பட்டு, லேமினேஷன் செய்து ஆய்வுக்கு வருவோரின் பார்வைக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!