திருப்பூரில் வரும் 4ல், ஏ.சி, ப்ரிட்ஜ் பழுது குறித்த இலவசப் பயிற்சி
Tirupur News- திருப்பூரில் ஏ.சி, ப்ரிட்ஜ் பழுது குறித்த இலவசப் பயிற்சி முகாம், வரும் 4ம் தேதி நடக்கிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சாா்பில் இலவச ஏ.சி., ஃப்ரிட்ஜ் பழுதுபாா்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபா் 4 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா், அனுப்பா்பாளையத்திலுள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஏ.சி., ஃப்ரிட்ஜ் பழுதுபாா்ப்புக்குகான 30 நாள்கள் இலவச பயிற்சி வகுப்பு வரும் அக்டோபா் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதில், எழுதப்படிக்கத் தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.
இந்தப் பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம்புதூா், திருப்பூா் - 641652 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் வருவோா்க்கு முன்னுரிமை வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890- 43923, 99525-18441, 86105-33436 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu