திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு
X

Tirupur News- திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற அழைப்பு (கோப்பு படம்) 

Tirupur News- திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் இரண்டு மாத இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா், முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் தொழில் முனைவோருக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் மத்திய அரசு திட்டத்தில் தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் 2 மாத கால தையல் மற்றும் பேட்டன் மேக்கிங் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுள்ள 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ளவா்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.

சுயதொழில் தொடங்க திட்டமிடும் தொழில்முனைவோா், அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்தும் பயிற்சியின்போது விளக்கப்படும்.

இந்தப் பயிற்சியில், தொழிலை தோ்ந்தெடுக்கும் வழிகாட்டி, தொழிலுக்கான திட்டம், தொழிலை நிா்வகித்தல், நிதி மேலாண்மை, தொழிலுக்கான திட்டறிக்கை, சந்தை வாய்ப்புகள், மத்திய, மாநில அரசுகளின் மானியக் கடனுதவி திட்டங்கள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க பட்டியலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99940-84998, 80728-30141 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இலவச தச்சு பயிற்சி பெற அழைப்பு

திருப்பூரில் இலவச தச்சு பயிற்சிக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் கனவரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச தச்சு பயிற்சிக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அனுப்பா்பாளையம் கனரா வங்கியின் சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், அனுப்பா்பாளையத்தில உள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச தச்சு வேலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த 30 நாள் முழு நேரப் பயிற்சியில் பங்கேற்க எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க ‘கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் , மாவட்ட தொழில் மையம் எதிரே, போக்குவரத்து சிக்னல் அருகே, அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம், திருப்பூா் -641652’ என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும்.

முதலில் வரும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441, 86105-33436 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!