அரசு அலுவலர்கள் என பொதுமக்களிடம் மோசடி; தம்பதியினர் கைது
அரசு அதிகாரிகள் என பொதுமக்களிடம் பண மோசடி செய்த தம்பதியினரான கவிதா, மற்றும் அவரது கணவர் ராஜ்குமார்.
Fraud Couple Was Arrested
திருப்பூரை சேர்ந்த கவிதா(45), இவர் பொதுமக்களிடம் தான் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்டிஓ வாக (மாவட்ட வருவாய் அலுவலர்) வேலை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில், , பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் வேலை செய்து வருவதாகவும், போலி அரசு ஊழியர் அடையாள அட்டையை காண்பித்து ஆசை வார்த்தை கூறியுள்ளார் இதை நம்பி, அவிநாசி சேடர்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.10 லட்சம் பணத்தை கவிதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்,
தம்பதி குறித்து அந்த பெண் விசாரித்தபோது, கவிதா என்பவர் ஆர்டிஓ இல்லை என்பதும், போலி அடையாள அட்டையை காண்பித்து ஏற்மாற்றியதும் தெரியவந்தது இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தம்பதியர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது அப்போது தம்பதி சாக்குபோக்கு சொல்லி பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர்,
மேலும் இதேபோன்று பலரிடம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வாங்கி தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும், நம்ப வைத்து சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் ஏமாற்றியதாக தெரிகிறது , இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கவிதா மற்றும் அவரது கணவர் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்
தகவலறிந்த மேலும் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் கொடுத்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இன்னும் பல பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தும் வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu