கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்; 24 பேர் கைது
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்த 10 பெண்கள் உள்பட 24 பேரை, போலீசார் கைது செய்தனர்.
Collector in Tamil -பல்லடம் தாலுாகா கோடங்கிப்பாளையத்தில் முறைகேடாக அனுமதி பெற்று இயங்கி வரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார், 10-வது நாளாக நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவருடைய சொந்த நிலத்தில் இருந்து வருகிறார். பல்லடம் தாசில்தார் தலைமையில் ஆய்வு செய்த பின்பும் இதுவரை இரண்டு குவாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படாமல் உள்ளது. செந்தில்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் என 10 பெண்கள், நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த தெற்கு போலீசார், உண்ணாவிரதம் இருந்த 10 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மண்டபத்தில் 24 பேரும், மதியம் 12 மணி முதல், உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். போலீசார் பேசியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். திருப்பூர் ஆர்.டி.ஓ. பண்டரிநாதன், தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் உண்ணாவிரதம் நீடித்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu