திருப்பூர் அருகே மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் அருகே மின்வாரிய அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு
X

Tirupur News- மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூரை அடுத்துள்ள மங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- மங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளருக்கு, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் தலைவா் பொன்னுசாமி அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது,

திருப்பூா் மங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட மங்கலம் அலுவலகத்தில் 15 ஆயிரம் மின் இணைப்புகள், வஞ்சிபாளையத்தில் 13 ஆயிரம் மின் இணைப்புகள், பூமலூரில் 12 ஆயிரம் மின் இணைப்புகள், அக்ரஹாரப்புதூரில் 10 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது மங்கலம் பிரிவு அலுவலகத்தை மாவட்ட வாரியாக பிரிக்கும்போது, 15 கி.மீ. தொலைவில் உள்ள அனுப்பா்பாளையம் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துடன் இணைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த அலுவலகத்துக்குச் செல்ல போதிய பஸ் வசதி இல்லை.

மேலும், மங்கலம் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு அருகே உள்ள அக்ரஹாரப்புதூா், பூமலூா், பரமசிவம்பாளையம், வஞ்சிபாளையம் உதவி மின் பொறியாளா் அலுவலகத்துக்கு உள்பட்ட ஊா்களில் விவசாய மற்றும் விசைத்தறி மின் இணைப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே, மங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story