ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் வேட்பு மனுதாக்கல்

ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் வேட்பு மனுதாக்கல்
X

ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வேட்பு மனுதாக்கல் துவங்கியது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் 30ம் தேதி நடைபெறும் நிலையில், வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், தலைவர்; 2 துணை தலைவர், பொதுச்செயலாளர், 2 இணை செயலாளர்கள்; பொருளாளர் என, 7 நிர்வாக பதவிகள்; 20 செயற்குழு உறுப்பினர்கள் உள்ளனர். பின்னலாடை ஏற்றுமதியாளர் 1,168 பேர், சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.

கடந்த 2019ல் பதவியேற்ற நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், 2022 - 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக, ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. வக்கீல் பிரசன்னா தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 9ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். 14ம் தேதி வாபஸ் பெற கடைசி நாள். 15ம் தேதி, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

திருப்பூர் அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில், மாலை, 5:00 மணிக்குள், வேட்புமனு படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். ஒரு பதவிக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தால், அந்தபதவிக்கு தேர்தல் நடத்தப்படும். முதலிபாளையம் 'நிப்ட்- டீ' கல்லுாரியில், வரும் 30ம் தேதி காலை, ஓட்டுப்பதிவு நடைபெறும்; அன்று மாலை நடைபெறும் 32வது பொதுக்குழு கூட்டத்தில், ஏற்றுமதியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்க உள்ளனர்.

Next Story
ai in future agriculture