திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு ‘புறப்பட்ட’ மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள்

திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு ‘புறப்பட்ட’ மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், லாரியில் ஏற்றப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள். 

Tirupur News,Tirupur News Today- கண்டெய்னர் லாரிகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நேற்று கன்டெய்னர் லாரிகள் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உள்ளாட்சி அமைப்பு தேர்தலில், துவக்கத்தில் தேர்தல் சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட தாள்களில், வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு ஓட்டு போடும் வழக்கம் இருந்தது. ஓட்டுச் சாவடிக்குள் சென்று, வாக்கு சீட்டில் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் சின்னத்துக்கு எதிரே முத்திரையிட்டு, அந்த சீட்டை முறையாக மடித்து பெட்டிக்குள் போட வேண்டும். தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நாட்களில், மணிக்கணக்கில் ஓட்டுப்பெட்டிகளில் உள்ள வாக்கு சீட்டுகளை எடுத்து, எண்ணி சரியான ஓட்டுப்பதிவுகளை பதிவு செய்து, இதில் செல்லாத ஓட்டுகளை பிரித்து அறிவித்து என, ஏகப்பட்ட சிரமங்களும், குளறுபடிகளும் இருந்த நிலையில், இந்த மின்னணு ஓட்டுப்பதிவு முறை, எளிதாக்கப்பட்டது. அதனால், மின்னணு ஓட்டுப்பதிவு முறை, கொண்டுவரப்பட்டு பல ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. 15 ஆண்டுகளை கடந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், 15 ஆண்டுகளை கடந்த மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் எவ்வளவு உள்ளன என, தேர்தல் கணக்கெடுக்கப்பட்டன.

துணை கலெக்டர் ராம்குமார் மேற்பார்வையில், அதிகாரிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், அங்கிருந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. நேற்று காலை தேர்தல் தனி தாசில்தார் தங்கவேல், மாநகராட்சி உதவி ஆணையாளர் சந்தானம் மற்றும் பணியாளர்கள், இருப்பில் இருந்த இந்த எந்திரங்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தனர்.

பின்னர் அந்த எந்திரங்கள் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கண்டெய்னர் லாரிகளில் ஏற்றப்பட்டன. 1930 கண்ட்ரோல் யூனிட், 1263 பேலட் யூனிட் உள்பட மொத்தம் 3ஆயிரத்து 193 மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு கொண்டு செல்ல முடிவானது. இந்த ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கண்டெய்னர் லாரிகள் ஏற்றப்பட்டு, பெங்களூருவுக்கு புறப்பட்டன. அதிகாரிகள் முன்னிலையில், இவையனைத்தும் 4 கன்டெய்னர் லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

Tags

Next Story