மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறைகள்; கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறைகள்; கலெக்டர் ஆய்வு
X

Tirupur News- மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறைகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். 

Tirupur News- திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்பறைகளை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தால் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, கோபிசெட்டிபாளையம், அந்தியூா், பவானி, பெருந்துறை ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறைகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, வேலம்பாளையம் மண்டல அலுவலகத்தில் திருப்பூா் வடக்கு தொகுதி மின்னணு இயந்திரங்கள் இருப்பறை, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம், பவானி வட்டாட்சியா் அலுவலகம், பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் மின்னணு இயந்திரங்கள் இருப்பறைகளை ஆய்வு செய்ததுடன் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் போதுமான குடிநீா் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், திருப்பூா் சாா் ஆட்சியா் சௌம்யா ஆனந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) கிருத்திகா எஸ்.விஜயன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியா் கண்ணப்பன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தா்மராஜ், ராம்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil