திருப்பூரில் 'களை கட்டியது' தீபாவளி பர்சேஸ்
கடை வீதிகளில் திரண்ட மக்கள் கூட்டம்
Diwali Purchase -ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பண்டிகைகளில், முதன்மையானது தீபாவளி பண்டிகை. புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து, நண்பர்களுடன், உறவினர்களுடன் விருந்து சாப்பிட்டு, அன்று ரிலீஸ் ஆன புதுப்படம் பார்த்து, தீபாவளளி திருநாளை இனிமையான ஒரு நாளாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி ஊக்குவிக்கிறது. அரசு துறை சார்ந்த அலுவலர்களுக்கும் குறிப்பிட்ட சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
பனியன் உற்பத்தி தொழிற்சாலைகள் நிறைந்த திருப்பூரில், போனஸ் பட்டுவாடா இன்னும் துவங்கவில்லை. எனினும், முன்னதாகவே, தீபாவளி பர்சேஸ் செய்வதில், திருப்பூர் மக்கள் ஆர்வமாக இறங்கி விட்டனர். பிறமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், 90 சதவீதம் பேர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றுவிடுவது வழக்கம். எனவே, தீபாவளி பர்சேஸ் செய்வதில், தற்போதே பலரும் தீவிரம் காட்ட துவங்கி விட்டதால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஞாயிறு தினமான நேற்று திருப்பூர் மாநகர பகுதிக்குள் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், முக்கிய ரோடுகள் மற்றும் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் மாநகர பகுதிக்குள் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பம்,குடும்பமாக வந்து புத்தாடைகளை வாங்கிச்சென்றனர்.
தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான, தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த மாதம் துவக்கத்தில் இருந்தே, தீபாவளிக்காக புத்தாடை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்திற்கான பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால், திருப்பூரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் நேற்று பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக ஜவுளிக் கடைகளில் மக்கள் குடும்பமாக வந்து, அனைவருக்கும் புத்தாடைகளை வாங்கி சென்றனர். இதனால் திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் காணப்பட்டனர். குறிப்பாக புது மார்க்கெட் வீதியில் ஜவுளிக்கடை, நகைக்கடை, பேன்சி, ஓட்டல்கள் உள்பட ஏராளமான கடைகள் இருப்பதால், அந்த பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளுக்கு பொதுமக்கள் நேற்று குடும்பத்துடன் அதிகளவில் வந்ததால், மாநகரின் முக்கிய ரோடுகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. இன்னும் வரும் நாட்களில், தீபாவளி பர்சேஸ் செய்யவரும் மக்கள் கூட்டம் பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதற்கேற்ப மாநகர பகுதியில் முக்கிய ரோடுகள் மற்றும் பிரதான வீதிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமான, போக்குவரத்து மாற்றங்களை போலீசார் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மாநகர பகுதிக்குள், கனரக வாகனங்கள் போக்குவரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu