விவசாயிகளால் ஏற்படும் இடையூறு; திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் சப் கலெக்டரிடம் கோரிக்கை

விவசாயிகளால் ஏற்படும் இடையூறு;  திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் சப் கலெக்டரிடம் கோரிக்கை
X

Tirupur News- திருப்பூர் சப் - கலெக்டரிடம் மனு அளித்த ரோட்டோர வியாபாரிகள். 

Tirupur News- ரோட்டில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காண வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் சப் - கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் ரோட்டில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளால் ஏற்படும் இடையூறுகளுக்கு தீர்வு காண வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யூ., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன் தலைமையில் நேற்று சங்கத்தினர் கலெக்டர் மற்றும் சப் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில் ரோட்டோரங்களிலும், சில கடைகளில் அதன் முன்பகுதியிலும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கிறோம். உழவர் சந்தை நேரம் தவிர்த்து இந்த வியாபாரம் நடக்கிறது.

கடந்த 31ம் தேதி உழவர் சந்தை விவசாயிகள் ரோட்டில் கடைகளை வைத்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரம் செய்யத் துவங்கினர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக இந்த செயல் உள்ளது. சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் விதமா இது உள்ளது. இதில் சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசு விதிகளின்படி தெருவோர வியாபாரிகள் குழு அமைக்க வேண்டும். சந்தையிலிருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு அப்பால் எங்கள் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
ai in future education