திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு "மோடி சுட்ட வடை" விநியோகம்

திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு மோடி சுட்ட வடை விநியோகம்
X

திருப்பூர் பாண்டியன் நகரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் மோடிசுட்ட வடை என அச்சடிக்கப்பட்ட நோட்டீசில் வைத்து வடை விநியோகிக்கப்பட்ட காட்சி.

திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு "மோடி சுட்ட வடை" விநியோகம் செய்யப்பட்டது.

திருப்பூரில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு "மோடி சுட்ட வடை" என அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது.

திமுகவினர் சார்பில் "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது அதன் ஒருபகுதியாக நேற்ற திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ் தலைமை தாங்கினார் இதில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்

இதில் மாநகர மேயர் தினேஸ்குமார் உள்ளிட்ட மாவட்ட, மாநகர திமுக பொருப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திமுக சார்பில் வடை வழங்கப்பட்டது அதை மோடி சுட்டவடை என அச்சடிக்கப்பட்ட நோட்டீஸில் வைத்து வழங்கினர் இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்