திருப்பூரில், ரூ.254.10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் ஆய்வு

திருப்பூரில், ரூ.254.10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் ஆய்வு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்திய அமைச்சர் மு.பெ சாமிநாதன். 

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.254.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, அமைச்சர் மு.பெ சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.254.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது,

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தென்னம்பாளையம் மீன் சந்தை, புதுப்பிக்கப்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்டில் ரூ.17.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பஸ் ஸ்டாண்ட் எதிரில் ரூ.27.05 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பணி ,திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலம் மற்றும் 4-ம் மண்டலப்பகுதிகளில் ரூ.207.15 கோடி மதிப்பீட்டில் 17எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் மற்றும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செல்லாண்டியம்மன் துறை ராஜீவ் நகர்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அமர்ஜோதி கார்டன் காளியப்பா நகர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 20,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் கட்டப்பட்டு வரும் கால்நடை பன்முக மருத்துவமனை பணியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகராட்சியை பொறுத்த வரையில் குடிநீர்த்திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிந்த பிறகு மாநகர பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கு வழங்குகின்ற சூழ்நிலை ஏற்படும். இனி வரும் காலங்களில் குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் அடிப்படை தேவைகள் குறித்து தனி கவனம் செலுத்தவும், நடந்து வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ் குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர், தலைமைப்பொறியாளர் (பொறுப்பு) செல்வவிநாயகம், உதவி ஆணையர் வினோத், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு