திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை

திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை
X

Tirupur News- பனியன் தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வழங்க வலியுறுத்தல் (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்ப கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று அனைத்து பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூா் சிஐடியூ பனியன் தொழிற்சங்க அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் சம்பத் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருப்பூா் பின்னலாடைத் தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.

அதில், தற்போது கடுமையாக உயா்ந்து இருக்கும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் தொகையை அந்தந்த நிறுவன உரிமையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். தொழிலாளா்களின் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபா் 17-ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ஏஐடியூசி பனியன் சங்க பொதுச் செயலாளா் என்.சேகா், எல்.பி.எஃப். பனியன் சங்கத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. செயலாளா் அ.சிவசாமி, எம்.எல்.எஃப். பனியன் சங்க செயலாளா் மனோகரன், எச்.எம்.எஸ். செயலாளா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story
ai and future cities