திருப்பூர், கோவை மாநகராட்சி மேயர்கள் போட்டியின்றி தேர்வு
தினேஷ்குமார்
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பிப்ரவரி 19ல் தேர்தல் நடந்தது. திமுக கூட்டணி கட்சிகள் 37 இடங்களை கைப்பற்றி, திருப்பூர் மாநகராட்சியை தன்வசப்படுத்தின. தி.மு.க மட்டும் 23 வார்டுகளை வென்றது. இந்திய கம்யூனிஸ்ட் -6, ம.தி.மு.க - 3, காங்கிரஸ் - 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, மனிதநேய மக்கள் கட்சி - 1 வார்டில் வெற்றி பெற்றன.
மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் வேட்பாளராக 49-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த ந.தினேஷ்குமாரை (42) தலைமை அறிவித்தது. இன்று காலை, திருப்பூரில் நடைபெற்ற மேயர் தேர்தலில், போட்டியின்றி தினேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினேஷ்குமார் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்ட பின்னர், மேயருக்குரிய அங்கி மற்றும் செங்கோல் ஏந்தியபடி மேயர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.
கடந்த 2005-ம் ஆண்டு தேமுதிகவில் இணைந்த தினேஷ்குமார், கோவை வடக்கு மாவட்ட இளைஞரணியில் பொறுப்பு வகித்தார். அக்கட்சியில் 2 முறை எம்.பி. பதவிக்கும், ஒருமுறை மேயர் பதவிக்கும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் திமுகவில் இணைந்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வந்தார.
கடந்த 2020ஆம் ஆண்டில் திருப்பூர் வடக்குமாநகர திமுக பொறுப்பாளராகநியமிக்கப்பட்டார். தொடர்ந்து களப் பணியாற்றியது, அனைவரிடமும் எளிமையாக பழகும் தன்மை மற்றும் கடின உழைப்பினால் தற்போது மேயராக ந.தினேஷ்குமார் உயர்ந்துள்ளார்.
இதேபோல், கோவை மாநகராட்சி மேயராக கல்பனா போட்டியின்றி, தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 19வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேயர் கல்பனா, கோவை மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர். இதேபோல், துணை மேயராக, 92வது வார்டு வெற்றிச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu