சின்னாண்டிபாளையம் குளத்தில் சுற்றுலா வளா்ச்சி திட்டப் பணிகள்
Tirupur News- திருப்பூா் சின்னாண்டிபாளையம் குளத்தில் நடந்துவரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் ஆய்வு செய்தார்.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் சின்னாண்டிபாளையம் குளத்தில் நடைபெற்றுவரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் 3 மாதங்களில் நிறைவுறும் என்று மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருப்பூா் மாநகரப் பகுதியில் உள்ள சின்னாண்டிபாளையம் குளத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பாக ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியதாவது,
இந்த சுற்றுலா வளா்ச்சித் திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக படகு இல்லம், சிறுவா் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டிக் கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீா் வசதிகள், மின்விளக்குகள், கழிவறை வசதிகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
திட்டப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் நடைபெற்று வருகின்றன. இன்னும் 3 மாதங்களில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று திருப்பூா் மாநகரப் பகுதி மக்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்குத் தலமாக இந்தக் குளம் அமையும் என்றாா்.
இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளா் பூபதி, நீா்வளத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அதிகாரிகள் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu