தேசிய ஒருமைப்பாட்டு முகாம்: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்: திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர் தேர்வு
X

தேர்வான மாணவர் அருள் குமாரை பாராட்டிய கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள். 

கோவையில் நடைபெறும், தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர் அருள்குமார் தேர்வாகியுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலை கழகம் சார்பில், கோவை இராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று14.12.2021, முதல், வருகிற 20.12.21 முடிய, தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறுகிறது.

இதில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, சட்டீஸ்கர், டில்லி, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். அவ்வகையில், தமிழகத்தில் இருத்து பத்து மாணவர்கள், இம்முகாமில் பங்கேற்க உள்ளனர்.


அருள் குமார்

இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் அருள்குமார், (இரண்டாமாண்டு வேதியியல் துறை) மாணவன் தேர்வாகி உள்ளார்.

மாணவர் அருள் குமாரை, இன்று சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமையில், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில், வேதியியல் துறைத்தலைவர் ராஜகோபால், மற்றும் பேராசிரியர்கள் ராஜாசிங், சம்பத்குமார், ஹரேஷ் பாண்டியா, விநாயகமூர்த்தி ஏராளமான அலகு -2 மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture