சிக்கண்ணா கல்லூரி என்எஸ்எஸ் முகாம் சார்பில் பறவை நோக்கல் நிகழ்வு
கருமாபாளையத்தில், சிக்கண்ணா கல்லூரில் என்.எஸ்.எஸ். முகாம் சார்பில், பறவைகள் நோக்கல் நிகழ்வின்போது, கணக்கெடுப்பு மேற்கொண்ட மாணவர்கள்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக, அவினாசி அருகே கருமாபாளையம் கிராமத்தை, அரசு விதிமுறைகளின்படி தத்தெடுத்து, அங்கு ஏழு நாள் சிறப்பு முகாம், கடந்த 25.12.2021 முதல், வரும் 31.12.2021 வரை நடைபெற்று வருகிறது.
இதில் 4 - ஆம் நாளான இன்று, கிராமத்தில் உள்ள உள்ளூர் பறவைகளைக் பற்றி அறிந்து கொள்வதற்காக பறவைகள் நோக்கல் நிகழ்வு நடைபெற்றது. அதில் அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். திருப்பூர் இயற்கை கழகத் தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வலசை வரும் பறவைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதன் குணங்கள் என்ன, எந்தெந்த பறவைகள் எந்தெந்த நாட்டிலிருந்து வருகின்றன, எதற்காக வலசை வருகிறது என்பதைப் பற்றியும், பறவைகளால் மனிதர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று விரிவாக விளக்கி கூறினார்.
பின்னர் "காடுகளை வளர்ப்போம், பறவைகளைக் காப்போம்" என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்பு 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்ப் பறவைகளை கணக்கீடு செய்தனர். அதில் சிட்டுக்குருவி, புதர் குருவி, சின்னா, தவுட்டுக் குருவி, மைனா, தேன்சிட்டு, கொண்டலாச்சி, கருகருச்சன், ராபின், புள்ளி புறா, கதிர் குருவி, பிராமினி, கருங்கொண்டை நாகவாய், டே பேக்சைடு, சைட்டு, வலசைப் பறவை, பூட்டர், புல்புல், பட்டைக் கழுத்துப் புறா, கொக்கு, இரட்டைவால் குருவி, செம்பழுப்பு முதுகு கிச்சான், பச்சைக்கிளி, செம்புத்தான், வோல்டு ஸாடார்க் கிச்சான் பே பேக்குடு, நீலவாழ் பஞ்சு உருட்டான், வுட் ஸ்ட்ரைக், கருங்குயில் என 32 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை , சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu