திருப்பூரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர்.
Cell Phone Tower- திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு செந்தில்நகரில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில், தனியார் கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க பணி நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டவர் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன், மீண்டும் அதே கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து டவர் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி, 3-வது வார்டு கவுன்சிலர் லோகநாயகி மற்றும் பொதுமக்கள், திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.
கலெக்டருக்கு, அந்த மனுவை அனுப்பிய நிலையில், செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்தததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். கவுன்சிலர் தலைமையில் டவர் அமைக்கும் கட்டிடத்தின் முன் திரண்டனர். தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் அங்குவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பிரச்னை குறித்து, மீண்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களிடம் மனு அளிக்குமாறும், அதுவரை டவர் அமைக்கும் பணி நடக்காது எனவும் போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து, கலைந்து சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu