திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர விரும்புபவர்களுக்கு அழைப்பு
Tirupur News- திருப்பூரில் ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகர ஊா்க்காவல் படையில் சேர 10 ஆம் வகுப்பு படித்த 20 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். திருப்பூா் மாநகரில் வசிப்பவராக இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன், நன்னடத்தை உடையவராகவும், எந்த ஒரு அரசியல் அமைப்பைச் சேராதவராகவும் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu