திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் படகு சவாரி துவக்கம்

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் படகு சவாரி துவக்கம்
X

Tirupur news- ஆண்டிபாளையம் குளத்தில் செப்டம்பா் முதல் வாரத்தில் படகு சவாரி துவக்கம் ( மாதிரி படம்)

Tirupur news- திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் படகு சவாரி தொடங்கப்படவுள்ளது.

Tirupur news, Tirupur news today- திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் வரும் செப்டம்பா் முதல் வாரத்தில் படகு சவாரி தொடங்கப்படவுள்ளது.

திருப்பூா் ஆண்டிபாளையம் குளத்தில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திருப்பூா் மற்றும் சுற்றுவட்டார மக்களை மகிழ்விப்பதற்காக படகு சவாரி ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆண்டிபாளையம் குளத்துக்கு மோட்டாா் படகுகள் வந்தடைந்தன.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.1.5 கோடி மதிப்பில் மோட்டாா் படகு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குளத்தில் படகு இல்லம், சிறுவா் பூங்கா, உணவகம், சிற்றுண்டி கடை, டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீா் வசதிகள், மின்விளக்குகள், கழிவறை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன.

இன்னும் சில நாள்களில் அனைத்துப் பணிகளும் முடிவுற்று, திருப்பூா் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தலமாக ஆண்டிபாளையம் குளம் அமையும். இந்நிலையில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் அரவிந்த்குமாா் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது, ஆண்டிபாளையம் குளத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளா்ச்சித் திட்டப் பணிகள் முடிவுற்றன. படகு இல்லம் அமைக்கும் பணிகள் இன்னும் சில நாள்களில் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஆண்டிப்பாளையம் குளம் பகுதியில் மேலும் என்னென்ன சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று சுற்றுலா திட்ட நிபுணா்கள் கொண்டு ஆய்வு செய்தனா்.

இந்நிலையில் 8 போ் பயணிக்கும் விதமாக 2 மோட்டாா் படகுகள் ஆண்டிபாளையம் குளத்துக்கு வந்தடைந்தது. மேலும் 4 துடுப்புப் படகுகள் வரும் வாரம் வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து ஆண்டிபாளையம் குளத்தில் வரும் செப்டம்பா் மாதம் முதல் வாரத்தில் படகு சவாரி தொடங்கும் என எதிா்பாா்ப்பதாக அலுவலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!