திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் விடுமுறை

திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் விடுமுறை
X

Tirupur News- திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் விடுமுறை (கோப்பு படம்)

Tirupur News- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் நாளை 10-ம் தேதி முதல் பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் போனஸ் பெறுவதற்கு தயாராகி விட்டனர். சில பனியன் நிறுவனங்களில் கடந்த 4-ம் தேதி முதல் போனஸ் பட்டுவாடா தொடங்கியது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று திருப்பூர் மாநகர கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. ஜவுளிக்கடைகளில் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் நேற்று (புதன்கிழமை) முதல் போனஸ் பட்டுவாடா செய்யும் பணியை தொடங்கி விட்டனர். தொடர்ந்து இன்றும் (வியாழக்கிழமை) போனஸ் வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். திருப்பூரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் கடந்த 2 நாட்களாக வாகன நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. கடைவீதிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி பெருகி வருகிறது.

இந்நிலையில் நாளை (10-ம் தேதி) முதல் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் 20-ம் தேதிக்கு பின்னரே திருப்பூர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகே பனியன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கும். மேலும் திருப்பூர் மாநகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், கடைவீதிகளில் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் 700 போலீசார்

மாநகர கடைவீதிகளில் கைவரிசை காட்டுவதை தடுக்கும் வகையில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர டிராபிக் வார்டன்கள், ஊர்க்காவல் படையினர் போக்குவரத்தை சரிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரன் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் ஓரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதுபோல மாநகராட்சி சந்திப்பு, புதுமார்க்கெட் வீதி, வளர்மதி பஸ் நிறுத்தம், புஷ்பா ரவுண்டானா, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் போன்ற முக்கிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது