திருப்பூருக்கு சவாலாக மாறிய வங்கதேசம்; வரியில்லா வர்த்தகம் ஒப்பந்தம் தரும் பாதிப்பால் தொழில்துறை கவலை

திருப்பூருக்கு சவாலாக மாறிய வங்கதேசம்; வரியில்லா வர்த்தகம் ஒப்பந்தம் தரும் பாதிப்பால் தொழில்துறை கவலை
X

வங்கதேச ஆடைகள் விற்பனை அதிகரிப்பதால், திருப்பூரில் பனியன் உற்பத்தி குறைந்து வருகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என்ற அடிப்படையில், அதிக அளவில் வங்க தேசத்தில் உற்பத்தி செய்யும் ஆடைகள், தமிழகத்தில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், திருப்பூர் தொழில் துறை பாதிக்கப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- இந்தியாவுடன் ஒப்பிடும் போது வங்கதேசம் மிகச்சிறிய நாடு. பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள் அதிகம் கிடைக்காது என்பதால் சீனா உட்பட பிற நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

இதற்கு காரணம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவானதுதான். இந்தியாவுடன், 2011ல் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச ஜவுளி இந்தியாவுக்குள் வராதபடி கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., அமலான பின் அந்த வரி விலக்கப்பட்டதால், எவ்வித தடையுமில்லாமல் வங்கதேச வர்த்தகர்கள், தமிழகத்தின் தென் மாவட்ட எல்லை வரை கடை விரிக்க துவங்கியுள்ளனர். இறக்குமதி வரியும் இல்லாததால் 30 முதல் 40 சதவீதம் குறைவான செலவுடன் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கிறது.

இவ்வாறு கடந்த ஒரே ஆண்டில் வங்கதேச இறக்குமதி, 113 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது உள்நாட்டு சந்தைகளை பதம்பார்த்துவிட்டது. இதனால் உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகளுடன் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போராடி வெற்றி கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக சீனாவின் வர்த்தகர்களும், வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது வங்கதேசம்.

குறிப்பிட்ட பொருள் இறக்குமதியால் உள்நாட்டில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக கவுன்டர் வெய்லிங் வரி விதிக்கப்படுகிறது. உள்நாட்டு விவசாயிகள் பாதுகாப்புக்காக பஞ்சு இறக்குமதிக்கு வரி விதிப்பதும் அத்தகைய வரிதான். வங்கதேச ஆயத்த ஆடை இறக்குமதிக்கும் 12 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. 2016 முதல் விலக்கி கொள்ளப்பட்டது. இதற்கும் ஜி.எஸ்.டி.,க்கும் சம்பந்தமில்லை. உள்நாட்டு சந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு மீண்டும் கவுன்டர் வெய்லிங் வரி விதிப்பை தற்காலிகமாக அமலாக்க முடியும்.

இதுகுறித்து திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில்,

உள்நாட்டு விற்பனை பனியன் உற்பத்தி, நுால்விலை குறைந்த பின் சீராகி விட்டது. இருப்பினும், கடந்த ஓராண்டாக பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். நுால் விலை உயர்ந்து இருந்த போது, உள்நாட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அப்போது, வங்கதேச இறக்குமதியை பலரும் ஊக்குவித்தனர். அதன் விளைவு, தற்போது உள்நாட்டு தயாரிப்புகளுக்கு, உள்நாட்டு சந்தைகளிலேயே மதிப்பில்லாமல் போய்விடும். மலிவான விலையில் வங்கதேச ஆடையை வழங்குகின்றனர். வரிச்சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது.

திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் வங்கதேச ஆடைகள் ஆக்கிரமித்துள்ளன. சீனாவில் இருந்து வங்கதேசம் வந்து அங்கிருந்து திருப்பூருக்கு ஆடைகள் வருகின்றன. இது சீனாவின் தலையீடாகவும் மாறியுள்ளது. உற்பத்தி செலவில் 30 சதவீதம் வரை குறைவு என்பதால் வங்கதேச ஆடை குறைவான விலைக்கு கிடைக்கிறது. உள்ளூரில் தயாரித்த ஆடைகள் 100 ரூபாய் என்றால் வங்கதேச ஆடை 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே வங்கதேச இறக்குமதியை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, சீனாவின் வர்த்தகர்களும் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் ஆடை இறக்குமதி செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடு என்று பரிதாபம் காட்டியது இன்று உள்நாட்டு பனியன் மார்க்கெட்டுக்கே பெரிய சவாலாக, வங்கதேசம் விஸ்வரூபம் எடுத்துள்ளது, என்றனர்.

Tags

Next Story