முன்களப்பணியில் அசத்தல் - 'அன்னலட்சுமி' லீலா ஜெகனுக்கு விருது

திருப்பூரின் சிறந்த பெண் சேவையாளர் விருதினை, கிளாசிக் போலோ சிவராமிடம் இருந்து பெற்ற லீலா ஜெகன்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், நோய் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. திடீரென ஊரே முடங்கிப் போனதால், பலரும் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். அந்த நேரத்தில், திருப்பூர் வீதிகளில் பசியோடு தவித்த ஏழைகள் பலருக்கு தன்னார்வலர்கள் பலரும் உணவு, உடை என உதவிக்கரம் நீட்டினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், 'அன்னலட்சுமி' என்றி அழைக்கப்பட்ட லீலா ஜெகனும் ஒருவர்.
திருப்பூரில் நேற்று நடைபெற்ற தன்னார்வலர் தின விழாவில், லீலா ஜெகனுக்கு 'சேவையாளர்' விருது வழங்கப்பட்டது. ட்ரீம் 20 (Dream 20) பசுமை அமைப்பின் 7-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் நன்றி நவிழல் நிகழ்வு, திருப்பூர் வாவிபாளையம், சேம்பர் ஹாலில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, திருப்பூரின் பிரபல தொழிலதிபரும், டாலர் சிட்டியின் பசுமைப்பணிக்கு பங்களித்து வரும் வெற்றி அமைப்பின் தலைவருமான, கிளாசிக் போலோ சிவராம் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, ஐஏஎஸ், மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷேசாங் சாய் ஐபிஎஸ் ஆகியோர், கோவிட்-19 தடுப்பு பணிகளில் முன்கள சேவை ஆற்றியதற்காக, திருப்பூரின் சிறந்த பெண் "சேவையாளர்" என்ற விருதை, லீலா ஜெகனுக்கு வழங்கினர்.
விழாவில் பங்கேற்ற திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, ஐஏஎஸ், மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷேசாங் சாய் ஐபிஎஸ்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த லீலா ஜெகன் (35), கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக உள்ளார்தினமும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது இலவச உணவு அளிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் லீலா, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக ஆதரவற்றோர், தெருவோரத்தில் வசிப்பவர்கள், முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் காப்பகத்தில் உள்ளவர்கள் என இவர்களில் யாருக்கேனும் சிலருக்கு தினமும் உணவளித்து வருகிறார்.
இதனால், ஆதரவற்றோரின் அன்னலட்சுமி என்றே இவரை அழைக்கின்றனர். தன்னார்வலாகவும் சேவையாற்றி வரும் இவர், ஆதரவற்றோருக்கு அன்பு இல்லம் கட்ட வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்று, தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu