திருப்பூர் மாநகரில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் மாநகரில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், விண்ணப்பிக்க வாய்ப்பு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திருப்பூரில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், அதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, மாநகர போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம், செப்டம்பர் 22-ம் தேதி மாலை 5 மணி வரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவம் ஏ.இ.5-ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். உரிம கட்டணம் ரூ.1,200 ஆன்லைனில் செலுத்தியதற்கான சலான் இணைக்க வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தின் வரைபடம் 6 நகல்கள், வரைபடத்தில் சம்பந்தப்பட்ட இடத்தின் முகவரி முழுமையாக குறிப்பிட வேண்டும். அதில் மனுதாரர் தனது கையொப்பம் இட வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்த கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது இணைக்க வேண்டும். வாடகை கட்டிடமாக இருந்தால் 2023-24-ம் ஆண்டுக்குரிய சொத்துவரி ரசீது மற்றும் சாட்சிகள் முன்னிலையில் கட்டிட உரிமையாளருடன் ரூ.20 மதிப்புக்கு குறையாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக்கொண்ட வாடகை ஒப்பந்தம் ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்ற துறை கட்டிடமாக இருந்தால் அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்க வேண்டும். பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநகராட்சிக்கு கட்டிய கட்டிட உரிம கட்டணம் செலுத்திய ரசீது இணைக்க வேண்டும்.

இந்த ஆவணங்களுடன் அடுத்த மாதம் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணைக்கு பின் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும். குறித்த காலக்கெடுவுக்குள் பெறாத விண்ணப்பங்கள் முன்னறிவிப்பு இன்றி தள்ளுபடி செய்யப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து