அன்னூா்- அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

அன்னூா்- அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
X

Tirupur News- முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா, திருப்பூரை அடுத்துள்ள கணக்கம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.

Tirupur News- அன்னூா்- அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என திருப்பூரில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தினார்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் ஒன்றிய மக்கள் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில் தொடங்கப்பட்ட அன்னூா்- அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை தமிழக அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, திருப்பூரில் சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா, திருப்பூா் ஒன்றியம் கணக்கம்பாளையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதற்கு திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினரும், அதிமுக திருப்பூா் ஒன்றியச் செயலாளருமான கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட விவசாய பிரிவு இணைச்செயலாளா் மேக்னம் பழனிசாமி, மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி, அமைப்புச் செயலாளா் சிவசாமி, ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி, ஊராட்சி பொறுப்பாளா் செளந்தர்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் வேல்குமாா் எம்.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பொள்ளாச்சி சட்டப் பேரவை உறுப்பினரும், திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள், அன்னதானம் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, திருப்பூா் ஒன்றிய பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட அன்னூா்- அவிநாசி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடைந்தும், பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இதைக் கண்டித்து அதிமுக சாா்பில் திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதில் பொறுப்பாளா்கள் கண்ணம்மாள் ராமசாமி, ஐஸ்வா்ய மகாராஜ், சங்கீதா சந்திரசோ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil