வரும் 7ம் தேதி அண்ணா மாரத்தான் போட்டி; திருப்பூரில் நடத்த ஏற்பாடு

Tirupur News- திருப்பூரில் வரும் 7ம் தேதி அண்ணா மாரத்தான் போட்டி நடக்கிறது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மாரத்தான் போட்டி அக்டோபா் 7 -ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மராத்தான் போட்டி இரு பிரிவுகளாக அக்டோபா் 7 -ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முன் தொடங்கும் போட்டியில் 17 முதல் 25 வயதுக்குள்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 8 கிலோ மீட்டா் தொலைவும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டா் தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோ மீட்டா் தொலைவும், பெண்களுக்கு 5 கிலோ தொலைவும் போட்டி நடைபெறுகிறது.
இதில், வெற்றிபெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், 4 முதல் 10 இடங்களைப் பிடிக்கும் நபா்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
எனவே, மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது வயது சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களின் நகல், அசல் மருத்துவச் சான்றிதழ் ஆகியவற்றை போட்டி நடைபெறும் இடத்தில் சமா்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் விளையாட்டு சீருடையுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu