உடுமலை; சோமவாரப்பட்டியில் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் தமிழர் திருவிழா

உடுமலை; சோமவாரப்பட்டியில் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் தமிழர் திருவிழா
X

Tirupur News- நேர்த்திக்கடனாக, உடுமலை ஆல்கொண்டமால் கோவிலில் மலை போல் குவிந்த உருவார பொம்மைகள்.

Tirupur News- உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்டமால் கோவிலில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருவிழா கொண்டாடப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா இந்த கோவிலில் கொண்டாடப்படும்.

கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.

நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business