திருப்பூர்; சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க அறிவுரை

திருப்பூர்; சாலை விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க அறிவுரை
X

Tirupur News- சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுரை (கோப்பு படம்)

Tirupur News- சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்

Tirupur News,Tirupur News Today- சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாண்டியராஜன் பேசினாா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2, மாநகர காவல் ஆணையா் அலுவலகம் ஆகியன சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி புஷ்பா ரவுண்டானாவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாண்டியராஜன் பேசியதாவது:

அன்றாட வாழ்வில் சாலை விபத்துகள்அடிக்கடி காணும் நிகழ்வாகிவிட்டது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாததால் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. சாலையில் பயணிக்கும் அனைவரும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான அடிப்படை விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும். கைப்பேசியில் பேசிக் கொண்டு சாலையில் நடக்கவோ, வாகனம் ஓட்டவோ கூடாது.

சாலை விதிமுறைகளை முழுமையாக் கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக தலைக் கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும், என்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் சாலை விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லுரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்