அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி

அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி
X

விபத்தில் நொறுங்கிய கார். 

பாலக்காடு அருகே வாளையார் செக்போஸ்டில் நடந்த வாகன விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், கூத்தம்பாளையம் அண்ணாநகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி (49), முருகேசன் (47). இவர்களது நண்பர் பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

வியாபார விஷயமாக திருப்பூர் வந்த வெளிநாட்டினரை, காரில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை, திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். கோவை பாலக்காடு எல்லையான வாளையாறு செக்போஸ்ட் அருகில் வந்த போது, அதிகாலை 5.45 மணிக்கு எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இன்னோவா கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில், பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இறந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
ai in future agriculture