திருப்பூர் அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி வழிபாடு : கோவில்களில் பக்தர் கூட்டம்..!

திருப்பூர்  அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி வழிபாடு : கோவில்களில் பக்தர் கூட்டம்..!
X

திருப்பூர் தில்லை நகரில் உள்ள ராஜமாகாளியம்மன் கோவிலில், மீனாட்சியம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.  

aadi festival special pooja-திருப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நடந்த ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

திருப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில், இன்று நடந்த ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக, ஆண்டுதோறும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று, ஆடி மாதம் துவங்கியது. ஆறாம் நாளான இன்று , முதல் ஆடிவெள்ளி, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மகாளயம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.


அம்மன் கோவில்களில், இன்று அதிகாலையில் இருந்தே, பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!