திருப்பூரில் 10 லட்சம் தேசியக்கொடி தயாரிக்க இலக்கு

இந்திய தேசிய கொடி பைல் படம்.
Indian Flag Making -வரும் ஆகஸ்ட் 15ல், நமது இந்திய திருநாட்டின், 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூர் மற்றும் கோவையில், தேசிய கொடி உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது: 10 லட்சம் தேசிய கொடிகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி பொதுமக்கள் தங்களது, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக, அவரவர் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றிக்கொள்ள மத்திய அரசு, அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, வீடுகளில் அதிகளவில் தேசிய கொடிகள் ஏற்றப்பட இருப்பதால், கொடி உற்பத்தி, இம்முறை 10 லட்சமாக, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அதிகளவில் கொடி உற்பத்தி செய்யும் எட்டு தொழில் நிறுவனங்களுக்கு, ஆர்டர்கள் வந்துள்ளதால், கொடி தயாரிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. காட்டன் துணி கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், அத்தகைய ஆர்டர்களே, திருப்பூரில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது..வடமாநிலங்களில் தயாரித்து விற்பனைக்கு வரும் காகித மற்றும் பாலியடர் கொடிகளும் அதிகளவில் விற்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu