வரும் 12ல் பள்ளிகள் திறப்பு; புத்தகப் பைகள், சீருடைகள் வாங்க, திருப்பூரில் திரண்ட பெற்றோர் கூட்டம்

வரும் 12ல் பள்ளிகள் திறப்பு; புத்தகப் பைகள், சீருடைகள் வாங்க, திருப்பூரில் திரண்ட பெற்றோர் கூட்டம்
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் புத்தகப்பை (ஸ்கூல் பேக்) வாங்கும் கடையில் கூட்டம் காணப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- பள்ளிகள் திறக்கப்படுவதால், திருப்பூரில் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான புத்தகப் பைகள், சீருடைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வாங்க பெற்றோர்கள் திரண்டதால், கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Tirupur News,Tirupur News Today- கோடைகால விடுமுறைக்குப்பின் தமிழகம் முழுவதும் பள்ளிகள், நாளை மறுதினம் 12ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிக்கு செல்ல தேவையான புத்தகப்பை, சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு அதிகளவில் வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால், கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு, கடந்த 7ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 6 முதல் பிளஸ்-2 வரைக்கும் நாளை மறுதினம்(திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் வருகிற 14-ம் தேதியும் (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்வதற்கு தேவையான புத்தகப்பை, நோட்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு திருப்பூரில் கடைகளுக்கு பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுடன் வந்து செல்கின்றனர்.

இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பெரியகடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கேஎஸ்சி பள்ளி வீதி, பி.என் ரோடு உள்பட மாநகரின் பல கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பள்ளிகளின் சீருடைகளை தைப்பதற்காக சிலர் தையல் கடைகளுக்கு செல்கின்றனர். அதிகளவில் ரெடிமேடு ஆக தயாரித்து விற்பனை செய்யப்படும் சீருடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதேபோல், புது ஷூ மற்றும் காலணிகள் வாங்குவதற்காகவும், கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

நேற்று மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வாகனப்போக்குவரத்தும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. பள்ளி திறப்பிற்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் ஞாயிறு விடுமுறை தினமான இன்றும் நகரின் பிரதான கடை வீதிகளில் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும், வியாபாரமும் நன்றாக இருக்கும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!