தியாகி திருப்பூா் குமரனின் 92வது நினைவு தினம்; திருப்பூரில் அனுசரிப்பு

தியாகி திருப்பூா் குமரனின் 92வது நினைவு தினம்; திருப்பூரில் அனுசரிப்பு
X

Tirupur News- தியாகி திருப்பூா் குமரனின் 92வது நினைவு தினத்தையொட்டி, திருப்பூரில்  உருவச்சிலைக்கு மாலை அணிவித்த அரசியல் கட்சியினர். 

Tirupur News- திருப்பூர் குமரனின் 92வது நினைவு தினம், திருப்பூரில் அனுசரிக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

Tirupur News,Tirupur News Today- சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரனின் 92 -வது நினைவு தினத்தையொட்டி, திருப்பூரில் அவரது நினைவகத்தில் உள்ள உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், திருப்பூா் வடக்கு மாநகரச் செயலாளரும், மேயருமான தினேஷ்குமாா், திருப்பூா் தெற்கு மாநகரச் செயலாளா் நாகராசன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ்: திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் திருப்பூா் குமரன் நினைவத்தில் உள்ள அவரது உருவப் படத்துக்கு மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பாஜக: திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் பி.செந்தில்வேல் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாநில மகளிா் அணி செயலாளா் சுதாமணி சதாசிவம், ராயபுரம் மண்டல் தலைவா் பூபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அமமுக: அமமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் விசாலாட்சி தலைமையில் அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இந்திய ஜனநாயக கட்சி: இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் மாநில நிா்வாக்குழு உறுப்பினரும், திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவருமான பாரிகணபதி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, சமூக ஆா்வலா்கள், பல்வேறு அமைப்பு நிா்வாகிகளும் திருப்பூா் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!