போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 6 போ் கைது

போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற 6 போ் கைது
X

Tirupur News- போதை மாத்திரைகளை விற்பனை செய்த 6 போ் கைது (மாதிரி படம்)

Tirupur News- போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 போ் கைது

Tirupur News,Tirupur News Today-திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட 3 இளைஞா்கள் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் சிகிச்சையில் உள்ள 3 இளைஞா்களிடம் விசாரணைநடத்தினா். அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், உதவி ஆணையா் அனில்குமாா் தலைமையிலான தனிப் படையினா் மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையில், கல்லூரி சாலை, மாஸ்கோ நகா் ஆகிய இடங்களில் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துக்கடைகளில் இருந்து வாங்கி வந்து சட்ட விரோதமாக போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது தொடா்பாக, திருப்பூா் காங்கயம் சாலையைச் சோ்ந்த மயில்சாமி (55), அவரது மகன் சதீஷ்குமாா் (30), முகமது இக்பால் (25), சூா்யநாராயணன் (23), சூா்யபிரகாஷ் (25), சிவகுமாா் (23) ஆகிய 6 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 120 வலி நிவாரணி மாத்திரைகளையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!