தீபாவளி பண்டிகைக்காக திருப்பூரில் இருந்து 450 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Tirupur News- திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் பணி செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல இருக்கின்றனர்.
இதற்காக திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலமாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்ட பஸ்கள் அனைத்தும் தாராபுரம் ரோடு , கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், சிவகங்கை, சிவகாசி, தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மார்க்கமாக 250-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் ஸ்டாண்டுக்குள் கட்டுமான பணி நடப்பதால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.
இதற்காக பஸ் நிலையத்துக்கு மேற்கு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடம் தூய்மை செய்யப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருப்பூரில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு 450 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது
சிறப்பு ரயில் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ம் தேதி, 19- ம் தேதி, 26-ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 12, 19,26-ம் தேதிகளில் போத்தனூருக்கு மாலை 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.40 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கும், சேலத்துக்கு இரவு 9 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu