விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி

விபத்தில் பலியானவர்களுக்கு  இழப்பீடு வழங்காததால் 2 அரசு பஸ்கள் ஜப்தி
X

Tirupur News,Tirupur News Today- இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்கள் ஜப்தி (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததால், 2 அரசு பஸ்களை ஜப்தி செய்யப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திண்டுக்கல் மாவட்டம், பழனி புது ஆயக்குடியை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது 64). இவர் கடந்த 22-9-2014 அன்று பழனியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். பஸ் தாராபுரம் ரோடு பொல்லிக்காளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியதில் ராமலட்சுமி இறந்தார். ராமலட்சுமி இறந்ததற்கு இழப்பீடு கேட்டு அவரது குடும்பத்தினர் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கடந்த 3-3-2018 அன்று ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க ராமலட்சுமியின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினர் வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

திருப்பூர் நாச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ரம்சீனா (24). இவர் கடந்த 6-5-2019 அன்று இரவு தனது கணவர் அமானுல்லாவுடன் மோட்டார் பைக்கில் சென்றார். புதுப்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது அரசு பஸ் மோதியதில் ரம்சீனா கீழே விழுந்தார். பஸ் சக்கரம் அவருடைய இடது தொடையில் ஏறி இறந்தார். இதற்கு இழப்பீடு கேட்டு அமானுல்லா, அவருடைய மகன் ஆகியோர் திருப்பூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். கடந்த 25-1-2022 அன்று ரூ.25 லட்சத்து 7 ஆயிரத்து 24 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகத்தினர் இதுவரை பணம் செலுத்தாததால் பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி கோர்ட் ஊழியர்கள் அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். 2 வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்