திருப்பூரில், வரும் 6ம் தேதி, 15-ம் ஆண்டு கம்பன் விழா

திருப்பூரில், வரும் 6ம் தேதி, 15-ம் ஆண்டு கம்பன் விழா
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில், கம்பன் கழகம் ஆண்டு விழா, வரும் 6ம் தேதி நடக்கிறது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில், 15-ம் ஆண்டு கம்பன் விழா, வருகிற ஞாயிறு மாலை நடைபெறுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் வருகிற 6-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் தொழில் துறை மட்டுமின்றி கலை, இலக்கியம், ஆன்மிகம் அமைப்புகளிலும் மக்கள் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். ‘வனத்துக்குள் திருப்பூர்’ என்ற திட்டத்தின் மூலம், பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் நட்டு, பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் புத்தக திருவிழா, இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஆன்மிக நிகழ்வுகளுக்கு எப்போதுமே திருப்பூரில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதே போன்று, திருப்பூரில் கம்பன் கழகம், கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 2008ம் ஆண்டில் திருப்பூர் கம்பன் கழகத்தை, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரில் வந்து துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வரும் 6ம் தேதி திருப்பூர் கம்பன் கழகத்தின், 15ம் ஆண்டு விழா நடக்கிறது. நிகழ்ச்சிக்கு திருப்பூா் கம்பன் கழகத்தலைவா் ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனா் நாகராஜன், தலைமை வகித்து வரவேற்கிறாா். இதைத்தொடா்ந்து, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. இதில், கம்பன் காவியத்தில் கற்போா் நெஞ்சைப் பெரிதும் நெகிழச் செய்பவர் ‘அயோத்தி பரதனே’, ‘கிஷ்கிந்தை வாலியே’, ‘இலங்கை கும்பகா்ணனே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.

இதில், 'அயோத்தி பரதனே' என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த கோ.சரவணன், ஈரோட்டைச் சேர்ந்த வளா்மதி ஆகியோரும், 'கிஷ்கிந்தை வாலியே' என்ற தலைப்பில் திருச்சியைச் சேர்ந்த விஜயசுந்தரி, ராஜபாளையத்தைச் சேர்ந்த உமாசங்கா் ஆகியோரும், 'இலங்கை கும்பகா்ணனே' என்ற தலைப்பில், பெருந்துறையைச் சேர்ந்த ரவிகுமாா், திருப்பூா் பட்டயக்கணக்காளா் தெய்வநாயகி ஆகியோரும் பேசுகின்றனா்.

மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான போட்டிகள், கருத்தரங்கமும் நடைபெறுகின்றன. முடிவில் கம்பன் கழக துணைச் செயலாளா் கெளசல்யா வேலுசாமி நன்றி கூறுகிறார்.

Tags

Next Story