/* */

திருப்பூரில் 12 மணி நேரம் நீடித்த மின்தடை; பொதுமக்கள் அவதி

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை நீடித்த மின்தடையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில்  12 மணி நேரம் நீடித்த மின்தடை; பொதுமக்கள் அவதி
X

திருப்பூரில் இன்று 12 மணி நேரம் நீடித்த மின்தடையால் மக்கள் அவதி.

மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, மின்வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்ட மின்தடை செய்யப்படுகிறது. வழக்கமாக காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை அதிகபட்சம் 8 மணி நேரம் மட்டுமே, மின்தடை செய்யப்படுவது வழக்கம். சில வேளைகளில், பிற்பகல் 2 மணி வரை, மாலை 4 மணி வரை என, மின்தடை நேரம் செய்யப்படும் குறைவாகவும் இருக்கும்.

ஆனால், இன்று திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை என, மொத்தம் 12 மணி நேரம், மின்தடை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அறிவிக்கப்பட்ட மின்தடையே என்றாலும், 12 மணி நேர மின்தடை என்பது, பலவிதங்களில் மக்களை பாதிப்படைய செய்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, சமையலை முடிக்க முடியாமல் பெண்கள், இருட்டான சமையலறைகளில் அவதிபட்டனர். குடியிருப்பு பகுதிகளில், பகல் முழுவதும் இரைச்சலை வெளிப்படுத்திய, தொழிற்சாலை ஜெனரேட்டர் சத்தத்தால், பலரும் மன உளைச்சலடைந்தனர். சிறிய அளவிலான கடைகள், டீக்கடைகள், ஓட்டல்களில் மின்சாதனங்கள் பயன்பாடின்றி, பலவிதங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த 12 மணி நேர மின்தடை செய்யப்பட்ட பகுதிகள் அனைத்தும், நகரின் மையப்பகுதியாகவும், பிரதான ரோடுகள், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளாக இருந்ததால், நீடித்த மின்தடை கடுமையான பாதிப்பாக இருந்தது. சிறிய தொழில் நிறுவனங்கள் பலவும் இன்று இயக்கப்படாமல், தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர்.

இனிமேல், இதுபோன்று க;டுதலாக 12 மணி நேரம் வரை, மின்தடை நேரத்தை அதிகரிக்க கூடாது என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை மின்தடை

பொங்கலூர், வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை

இதுகுறித்து, பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் கூறியிருப்பதாவது;

பொங்கலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்கண்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பொங்கலூர், காட்டூர், தொட்டம்பட்டி, மாதப்பூர், கெங்கநாயக்கன்பாளையம், பெத்தாம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, உகாயனூர், என்.என். புதூர், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம் மற்றும் எல்லப்பாளையம் புதூர் துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் மின்பர்மான வட்ட செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

வீரபாண்டி துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை குறிஞ்சி நகர், ஆலாங்காடு, வீரபாண்டிபிரிவு, வீரபாண்டி ரோடு, புளியங்காடு, ஜே.ஜே.நகர், எம்.பி.எஸ்.முத்துநகர், சவுடேஸ்வரி நகர், கிருஷ்ணா நகர், லட்சுமி நகர் கார்டன் கிழக்கு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என, தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Nov 2022 4:54 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்