திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2,520 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2,520 ஆக உயர்வு
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 520 ஆக உயர்ந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட ஓட்டுச்சாவடிகள் பகுப்பாய்வு பட்டியலை இறுதிப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஏற்கனவே தாராபுரம் தொகுதியில் 298 ஓட்டுச்சாவடிகள், காங்கயத்தில் 295 ஓட்டுச்சாவடிகள், அவிநாசியில் 313 ஓட்டுச்சாவடிகள், திருப்பூர் தெற்கு தொகுதியில் 242 ஓட்டுச்சாவடிகள், உடுமலையில் 294, மடத்துக்குளத்தில் 287 ஓட்டுச்சாவடிகள் மற்றும் 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரித்து, புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருப்பூர் வடக்கு தொகுதியில் 5 ஓட்டுச்சாவடிகள், பல்லடத்தில் 2 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு தொகுதியில் 379 ஓட்டுச்சாவடிகள், பல்லடத்தில் 412 ஓட்டுச்சாவடிகளாக உயர்ந்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 513 ஓட்டுச்சாவடிகளாக இருந்தது தற்போது 7 ஓட்டுச்சாவடிகள் உயர்ந்து, 2 ஆயிரத்து 520 ஓட்டுச்சாவடிகளாக அதிகரித்துள்ளது.

இதுபோல் 37 ஓட்டுச்சாவடிகளின் கட்டிடம் மாற்றப்பட்டுள்ளது. 29 ஓட்டுச்சாவடிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 ஓட்டுச்சாவடிகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 9 ஓட்டுச்சாவடிகளில் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இறுதி செய்யப்படும் இந்த பட்டியல் சென்னை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் முதன்மை அரசு செயலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு இறுதி செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தாசில்தார் (தேர்தல்) தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!