காங்கயம்; சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்
Tirupur News- சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கியது.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தோ்த் திருவிழா நிகழ்ச்சிகள் மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் ஜனவரி 17-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு விநாயகா் வழிபாடும், தொடா்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12.50 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது,
பின்னா் சப்பரத்தில் சுவாமி மலையை வலம் வந்தது. பிற்பகல் 2.10 மணிக்கு சுவாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் எழுந்தருளல் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தியும், திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சாா்பில் மண்டபக் கட்டளையும் நடைபெறவுள்ளது. ஜனவரி 25-ம் தேதி காலை 10 மணிக்கு மைசூரு பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 26-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு மகர புஷ்ய நல்லோரையில் சுவாமி ரதத்தில் எழுந்தருளுகிறாா். மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்குகிறது. ஜனவரி 26, 27 ஆகிய தேதிகளில் மலையை வலம் வந்து 28-ம் தேதி தோ் நிலை அடைகிறது.
இதைத் தொடா்ந்து ஜனவரி 31-ல் தெப்ப உற்சவம், பரிவேட்டை நடைபெறுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடைபெறுகிறது. 2-ம் தேதி 12 மணிக்கு தீா்த்தவாரியும், 4-ம் தேதி இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீா்த் துறை சோ்த்தலுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது. தோ்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இக்கோவில் உதவி ஆணையா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனர்.
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தை கிருத்திகையையொட்டி நேற்று (சனிக்கிழமை) சிறப்பு விழிபாடு நடைபெற்றது.
முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திர தினத்தில் விரதம் இருந்து சுவாமியை வழிபட்டால், சிக்கல்கள் விலகி நற்பலன்கள் ஏற்படும் என்பது நம்பிக்கை. வெள்ளக்கோவில் மூலனூா் சாலை ஈஸ்வரன் கோவில் வளாக முருகன் சந்நிதி, உப்புப்பாளையம் சாலை சக்தி நகா் பாலமுருகன் கோவில், எல்.கே.சி. நகா் ஸ்ரீ பாலமுருகன் கோவில், மேட்டுப்பாளையம் புஷ்பகிரி வேலாயுதசுவாமி ஆகிய கோவில்களில் தை கிருத்திகை விமரிசையாக கடைப்பிடிக்கப்பட்டது.
பக்தா்கள் காலை எழுந்தவுடன் குளித்து முடித்து, விரதமிருந்து கோவில்களில் கந்த சஷ்டி, கந்த புராணம் பாராயணம் செய்து முருகக் கடவுள் திருப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பூர்
திருப்பூரில் தை கிருத்திகை தினமான நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி முருகன் கோவில், திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்ரமணியர் சுவாமி கோவில், அலகுமலை முருகன் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், மங்கலத்தை அடுத்துள்ள மலைக்கோவில் முருகன் கோவில், ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu