கோவில் நகைகளை உருக்கும் திட்டம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்
X

Tirupur News-கோவில் நகைகளை உருக்கும் திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இந்து முன்னணி வலியுறுத்தல் (மாதிரி படம்)

Tirupur News- கோவில் நகைகளை உருக்கும் திட்டம் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

Tirupur News,Tirupur News Today- கோவில் நகைகளை உருக்கும் திட்டம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை

தமிழக சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பேசுகையில், கோவில் நகைகள் உருக்கி டெபாசிட் செய்த வகையில் ஆண்டுக்கு ரூ.6 கோடி வருமானம் வருவதாகவும், இந்தத் திட்டம் முழுமை பெறும்போது ரூ.25 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளாா். இந்தத் திட்டம் தொடா்பான சந்தேகங்களை கேள்வியாக எழுப்பியபோது இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

பக்தா்கள் செலுத்தும் காணிக்கை நகைகள் பெரும்பாலும் 24 காரட் தங்கமாக இருக்காது. இந்த நகைகளை உருக்கும் போது கிடைத்த தாமிர உலோகம், நகைகளில் இருந்த நவரத்தினங்கள், வைரம் போன்றவை டெபாசிட் வைக்கப்பட்டதா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனவே, கோவில் நகைகளை உருக்கும் திட்டம் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story