திருப்பூரில் இவிஎம் இயந்திரங்கள் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு
Tirupur News- திருப்பூரில் ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
துணை ராணுவத்தினர், போலீஸார் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சி முகவர்கள் கண்காணிப்பு அறை முன்பு ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் காலை 8 மணிக்கு செல்லும் கட்சியினர் மாலை 4 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு செல்பவர்கள் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் மறுநாள் காலை 8 மணி வரையிலும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம்கள் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் ஒருங்கிணைந்து கண்காணிக்க பாதுகாப்பு பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளின் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திடீரென பழுதடைந்தன. இதையடுத்து அரசியல் கட்சியினர் ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கேமராக்கள் தெரியவில்லை.
தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் குழுவினர், உடனடியாக விரைந்து பழுதடைந்த கேமராக்களை சுமார் அரை மணி நேரத்தில் சீரமைத்தனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu