திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நாளை (பிப். 1ம் தேதி) பேச்சுப் போட்டி
Tirupur News-பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நாளை பேச்சுப் போட்டி நடக்கிறது (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு நாளை, (பிப்ரவரி 1) பேச்சுப் போட்டி நடைபெறுகிறது
இதுகுறித்து ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறையின் 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் தமிழ் அறிஞா்கள், எழுத்தாளா்கள் ஆகியோரின் நினைவிடங்களில் அவா்களின் பிறந்த நாளில் உள்ளூா் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை நாராயண கவி, சு. அவினாசிலிங்கம் மற்றும் க. பழனிசாமி ஆகியோரின் இலக்கியப் பணி, தமிழ்த்தொண்டு, தமிழ்மொழிக்கான பங்களிப்பினை நினைவுகூரும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உள்ளூா் தமிழறிஞா்கள், இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிப்ரவரி 6-ம் தேதி காலை 10 மணிக்கு இலக்கியக் கூட்டம் நடைபெறகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள இலக்கிய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், தமிழறிஞா்கள், எழுத்தாளா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்கலாம். முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு, ‘உடுமலை நாராயண கவியின் திரைப் பாடல்கள், அவரது கவித்திறன், கல்விக் கடல் அவினாசிலிங்கனாா், அவரது சமுதாயப்பணி’ ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு, ‘உடுமலை நாராயண கவியின் முற்போக்கு சிந்தனைகள், அவரது பாட்டும் பொருளும், அசியலில் அவினாசிலிங்கனாரின் பங்கு, பெண் முன்னேற்றத்தில் அவரது பங்கு’ ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் கல்லூரி மாணவா்களை கல்லூரி இணை இயக்குநா் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வா் மூலம் தோ்வு செய்து பரிந்துரைப் படிவத்துடன் போட்டிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதேபோல, பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவா்களை முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மூலம் தோ்வு செய்து பரிந்துரைப் படிவத்துடன் தொடா்புடைய போட்டிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இந்தப் போட்டிகளில் வெற்று பெறும் மாணவா்களுக்கு பிப்ரவரி 6--ம் தேதி நடைபெறும் இலக்கியக் கூட்டத்தில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu