ஓணம் பண்டிகைக்கு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

ஓணம் பண்டிகைக்கு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
X

Tirupur News,Tirupur News Today- ஓணம் பண்டிகைக்கு, திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம்-மங்களூருவுக்கு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

Tirupur News,Tirupur News Today- ஓணம் பண்டிகை, வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. மலையாள மக்கள் வாழும் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி, தமிழகம் உள்ள பிற மாநிலங்களில், வசிக்கும் கேரள மக்கள் இப்பண்டிகையை, தங்களது ஊர்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கேரள சமாஜ அமைப்புகள், இவ்விழாவை உறவினர்கள், நண்பர்களுக்கு சிறப்பு விருந்து படைத்து, கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, திருப்பூரில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கேரள மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம்-மங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வருகிற 26-ம் தேதி, அடுத்த மாதம் 2-ம் தேதி தாம்பரத்தில் இருந்து 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவுக்கு சென்றடையும். இந்த ரயில் சேலத்துக்கு இரவு 9.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 10.35 மணிக்கும், திருப்பூருக்கு 11.28 மணிக்கும், கோவைக்கு 12.37 மணிக்கும் செல்லும். இதுபோல் வருகிற 27-ம் தேதி, அடுத்த மாதம் 3-ம் தேதி இரவு 11 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் மதியம் 3.15 மணிக்கு தாம்பரத்தை அடையும். இந்த ரயில் கோவைக்கு காலை 6.27 மணிக்கும், திருப்பூருக்கு 7.13 மணிக்கும், ஈரோட்டுக்கு 8 மணிக்கும், சேலத்துக்கு 9.02 மணிக்கும் வந்து செல்லும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!