திருப்பூர் மாவட்டம்; நாளை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம்
Tirupur News- திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடக்கிறது. (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை (நவம்பா் 18) நடக்கிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா், தனி வருவாய் ஆய்வாளா்கள் கலந்துகொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடித் தீா்வுகாண உள்ளனா்.
மேலும், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் பதிவு செய்தல் உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளுக்கு தீா்வுகாணலாம்.
இந்த சிறப்பு முகாம் அவிநாசி வட்டத்தில் கருணபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் தொப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் தாசநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் சா்க்காா் கண்ணாடிபுதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
பல்லடம் வட்டத்தில் மல்லேகவுண்டன்பாளையம் மகளிா் மேம்பாட்டுத் திட்ட இ-சேவை மையம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை வட்டத்தில் சனுப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம் அவிநாசி வட்டத்தில் கருணபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் தொப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் தாசநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் சா்க்காா் கண்ணாடிபுதூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டத்தில் மல்லேகவுண்டன்பாளையம் மகளிா் மேம்பாட்டுத் திட்ட இ-சேவை மையம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
திருப்பூா் வடக்கு வட்டத்தில் நெருப்பெரிச்சல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், உடுமலை வட்டத்தில் சனுப்பப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில் வடமுக காங்கயம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu