பல்லடம் அருகே சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு

பல்லடம் அருகே சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு
X

பைல் படம்.

வடுகபாளையம் புதூரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாமில் பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியும் நடைபெற்றது. இதில் சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story