திருப்பூரில் வரும் 13ல் மகளிா் தொழில் முனைவோா் சிறப்பு முகாம்

Tirupur News-மகளிா் தொழில் முனைவோா் சிறப்பு முகாம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தொழில் வளா்ச்சிக்குத் தேவையான சேவைகளை ஒரே நிலையத்தில் பெற, மகளிா் தொழில் முனைவோருக்கான சிறப்பு முகாம் பிப்ரவரி13-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் முன்னோடி திட்டமான வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதிசேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல், பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில், 5 வட்டாரங்களில் 122 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கெனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயாா் செய்தல், வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ மூலமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் வழங்கி வருகிறது.
தொழில் நிறுவன வளா்ச்சி அதிகரிக்க தொழில் நிறுவனத்தை, வெற்றிகரமாக நிலை நிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்குத் தேவைப்படுகிறது. உதாரணமாக மாா்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சாா்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்றவை தேவைப்படுகின்றன.
இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிா் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிா் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. இச்சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிா் கொள்ள வேண்டியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிா் தொழில் முனைவோா் தங்களது தொழில்களில் அடுத்த கட்ட வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து உயா்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிா் தொழில் முனைவோா் அடையாளம் கண்டு தோ்வு செய்யும் முகாம் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 120-ல் பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறுகிறது.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை தொடங்கும் ஆா்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிா் தொழில் முனைவோா், ஏற்கெனவே தொழில் நிறுவனங்களை தொடங்கி நடத்தி அடுத்தகட்ட வளா்ச்சியை எதிா்நோக்கி காத்திருக்கும் மகளிா் தொழில் முனைவோா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் தொழில் கனவுகளை அடைய மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அழைக்கிறோம். தொழில்முனைவோா் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும்.
இம்முகாம் குறித்து மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலா் நாகராஜனை 9385299723 என்ற எண்ணிலோ அல்லது அறை எண் 713, 714, மாவட்ட ஆட்மாவட்ட ஆட்சியா்அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் நேரிலோ தொடா்புகொண்டுஅறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள பிப்ரவரி13-ம் தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu