திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
Tirupur News- திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கந்த சஷ்டி, சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு தினசரி இரவு திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இங்கு கந்தசஷ்டி விழா கடந்த 13-ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று சூரசம்ஹாரமும், 19-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகம் வாயிலாக இயக்கப்படுகிறது. தினமும் இரவு 7மணி முதல் 10 மணி வரை கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறப்பு பஸ் இயங்கும். தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும். பஸ்சில் பயணி ஒருவருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூரில் இருந்து அதிகளவில் முருக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை செல்வது போல, திருச்செந்தூருக்கு சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளுக்கு ஆண்டுதோறும் சென்று முருகனை வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் முருக பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu