அரசு பஸ்களில் சில்லறை பிரச்னைக்கு தீா்வு; திருப்பூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்
Tirupur News- பஸ் பயணங்களில் நீடிக்கும் பிரச்னையாக சில்லறை தட்டுப்பாடு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூாில் இயக்கப்படும் அரசுப் பஸ்களில் சில்லறை பிரச்னைகளுக்குத் தீா்வு காணவேண்டும் என்று திருப்பூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் காதா்பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அரசுப் பஸ் நடத்துநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பயணிகள் ஏறும்போது பயணச்சீட்டுக்கான சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்படும் பஸ்களில் நாள்தோறும் ஆயிரணக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனா்.
இந்தப் பஸ்களில் சில்லறை பிரச்னை என்பது தொடா்ந்து இருந்து வருகிறது. சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்காத பயணிகளை நடத்துநா்கள் பாதி வழியில் இறக்கிவிட்டுச் செல்லும் நிலை உள்ளது. தற்போது அதிக அளவில் டிஜிட்டல் பரிவா்த்தனை மேற்கொள்ளப்படுவதால் சில்லறைப் புழக்கம் குறைந்துள்ளது. ஆகவே, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நடத்துநா்களுக்குத் தேவையான அளவு சில்லறை வழங்கி இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பெரும்பாலான பஸ்களில், 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள நடத்துனர்கள் மறுக்கின்றனர். அதே போல் கடைகளிலும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்வதில்லை. இது நீண்டகால பிரச்னையாக இருந்து வருகிறது. இதுகுறித்தும் போக்குவரத்து கழக அதிகாரிகள், நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கி, பஸ்களில் ரூ. 10 நாணயங்களை பயணிகள் தரும் பட்சத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் நடத்துனர்கள், தங்களிடம் சேரும் சில்லறை நாணயங்களை மொத்தமாக வணிக நிறுவனங்களுக்கு தந்து கமிஷன் பெறுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu